மருத்துவ மாணவர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்! சீனா அனுமதிக்காததால் மத்திய அரசுக்கு கோரிக்கை!

 
மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நீட்

மருத்துவ மாணவர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா பெருந்தொற்று சீனாவில் உள்ள வுகான் நகரில் தோன்றியது. கொரோனா வைரஸ் தொற்று சர்வதேச நாடுகளில் காலடி எடுத்து வைத்து பல கோடி பேரை தாக்கி, பல லட்ச உயிர்களை பலிவாங்கியது. இரண்டரை ஆண்டுகளை கடந்தும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல்வேறு பெயர்களில் இன்னும் உலகை உலுக்கிக் கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா ஆரம்ப காலங்களில் சீனாவில் மருத்துவம் பயின்று வந்த தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பினர். தற்போது 2 ஆண்டுகள் ஆகியும் சீனாவில் தங்களது மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலையில் தத்தளித்து வருகின்றனர். எவ்வளவு முறை கோரியும் சீன அரசு தமிழக மருத்துவ மாணவர்களை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதனால் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா காரணமாக இந்தியா திரும்பிய மாணவர்கள் 2 ஆண்டுகளாகியும் மீண்டும் சீனா திரும்ப முடியாமல் இருப்பதால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளனர்.

மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நீட்

இது குறித்து சீன வெளியுறவுத் துறையிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் பேசி வருகிறார். இதற்கிடையில் பெற்றோர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆன்லைன் மூலமாக மருத்துவம் பயின்று வந்தாலும், எங்களுக்கு அதில் முழு உடன்பாடு இல்லை எங்களால் சரியான முறையில் கல்வி கற்க முடியவில்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மத்திய வெளியுறவுத் துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து எங்களை மீண்டும் சீனாவுக்கு சென்று மருத்துவம் பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் குதித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். டெல்லி, அரியானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சீன மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் ஜந்தர் மந்தர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.

மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நீட்

மாணவர்களின் வாழ்க்கைக்கும், படிப்புக்கும் என்ன வழி என்பதை மத்திய அரசும், சீன அரசும் இணைந்து பேசி நல்ல முடிவை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி போர் தொடங்கியதால் உக்ரைனில் மருத்துவம் மற்றும் பொறியியல் பயின்று வந்த கல்லூரி மாணவ, மாணவிகள் தாயகம் திரும்பினார்கள். அவர்களின் கல்வி குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் தற்போது கேள்வி எழுந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web