தவத்திரு ஊரான் அடிகள் காலமானார்! தமிழறிஞர்கள் இரங்கல்!

 
ஊரான் அடிகளார்

தவத்திரு ஊரான் அடிகளார், சிதம்பரம் அரசு மருத்துவமனையில், உடல் நலக் குறைவால் இன்று காலமானார். சிறந்த சொற்பொழிவாளராகவும், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அற நிறுவனக் காவலர் என பன்முகச் சிறப்புப் படைத்தவரான ஊரான் அடிகளார், வடலூர் சன்மார்க்க நிலையங்களில் 25 ஆண்டுகளுக்கு மேல் அறங்காவலர் முதலிய பல நிலைகளில் பணியாற்றியவர்.

அவரது 22 வது வயதிலேயே சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் நிறுவி, எண்பதுக்கும் மேற்பட்ட சமய ஆராய்ச்சி நூல்களை எழுதியும் பதிப்பித்தும் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். 
திருச்சி, சமயபுரம் நரசிங்க மங்கலத்தில் பிறந்த ஊரான் அடிகளார், மறைந்த முதல்வர் கருணாநிதி மீது மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்டிருந்தார். கலைஞரின் உற்ற நண்பராகவும் இருந்தார். 

Ooran-Adigal

1970-ம் ஆண்டு முதலாக வடலூரில் சன்மார்க்க நிலையங்களில் அறங்காவலராக தமது பணியைத் துவக்கி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக அருந் தொண்டாற்றியவர்.

1

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார்.  தவத்திரு ஊரான் அடிகளாரின் மறைவுக்கு சொற்பொழிவாளர், தமிழ் அறிஞர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web