இந்தியா அணி அபார வெற்றி! நாளை இறுதி போட்டி!

 
இந்தியா வெற்றி

நேற்று நடைப்பெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக தொடரையும் சமன் செய்த நிலையில், நாளை இறுதி போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கி நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி, முதல் போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இந்த போட்டியை வென்று தொடரை காப்பாற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியது.

இந்நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து. முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் சீரான விகிதத்தில் விக்கெட்டுகளை இழந்தனர்.  ஆனால்  3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஹென்ரிக்ஸ் மற்றும் மார்க்ரம் கூட்டணி அபாரமாக விளையாடி தென்னாப்பிரிக்க அணிக்கு 278 என்ற நல்ல ஸ்கோரை அமைத்துக் கொடுத்தனர்.

அபாரமாக விளையாடிய ஹென்ரிக்ஸ் மற்றும் மார்க்ரம் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பின்னர் 279 என்ற இலக்கை துரத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் இருவரும் சீரான தொடக்கத்தை கொடுத்தாலும், ஷிகர் தவன்  அவுட்டாகி வெளியேறினார்.3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் நிலைத்து நின்று விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.  

இறுதி வரை நிலைத்து நின்று விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 4.1 ஓவர் மீதம் இருக்கும் நிலையில் பந்தை பவுண்டரிக்கு விரட்டி இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

 கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 15 பவுண்டரிகள் அடித்து 113* ரன்களுடன் களத்தில் இருந்தார். இரண்டாவது போட்டியை வென்ற நிலையில் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது இந்திய அணி. தொடரின் முடிவை உறுதி செய்யும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை அக்டோபர் 11ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web