கத்தியால் மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்!! வாலிபரை தட்டி தூக்கிய காவல்துறை!!

 
அடையாறு

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் சதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 43 வயது பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 20-ம் தேதி வழக்கம் போல பணி முடிந்து வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், திடீரென சதா வீட்டுக்குள் புகுந்து கதவை தாழ்யிட்டுள்ளார். 

பின்னர், கத்தியை காட்டி மிரட்டி அந்த நபர், சதா வாயில் துணியை திணித்து கைகளை கட்டியுள்ளார். அதனை தொடர்ந்து, சதாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவர், தனது செல்போனிலும் படம் பிடித்துள்ளார். அந்த காட்சியை அவரிடம் காட்டி, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி விட்டு தப்பியுள்ளார்.

மிரட்டலுக்கு பயப்படாமல் சதா, அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், சதாவை பாலியல் பலாத்காரம் செய்தது திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விஷால் (23), என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்தனர். 

விசாரணையில், வேலை முடிந்து சதா, தினமும் தனியாக செல்வதை பார்த்ததும் அவரை பின்தொடர்ந்தேன். அப்போதுதான் அவர், வீட்டிலும் தனியாக இருப்பது தெரியவந்தது. சம்பவத்தன்று அவரை பின்தொடர்ந்து வீட்டுக்கு சென்றேன். அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் கதவை பூட்டவில்லை. உடனே நான் உள்ளே நுழைந்து கதவை பூட்டிக்கொண்டு கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாகவும் பதிவு செய்தேன்.

பின்னர் அதை வெளியே காட்டினால் இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டிய போதும் அவர் தைரியமாக புகார் அளித்துவிட்டார். இதையடுத்து, அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார், பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை