தற்காலிக ஆசிரியர் நியமனம் உடனடி நிறுத்தம்!! பள்ளிக் கல்வித்துறை அதிரடி!!

 
பள்ளிக்கல்வித்துறை

 மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 7,500 ரூபாய் தொகுப்பூதியமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாயும், முதுகலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர்கள் கூட்டம்

இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆசிரியர் தேர்வை நடத்த வேண்டுமென அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள்

இந்நிலையில் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி நிர்வாகக் குழுவினர் தாங்கள் விரும்பக்கூடியவர்களை தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து உடனடியாக இந்த பணிநியமனப் பணிகளை நிறுத்த வேண்டுமென்று திண்டுக்கல் மாவட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதே போன்று பல்வேறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்கள். இந்த விவகாரம் தற்போது கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web