ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்!! 130 பேர் பலி!! பலர் கவலைக்கிடம்!!!

 
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனால் கோஸ்ட் நகர் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு அடிக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்து நாசமாகின. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

டேக்

இதன் காரணமாக சுமார் 40க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகி இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள மக்கள் பலர் வீதிகளில் குடும்பம், குடும்பமாக தஞ்சம் அடைந்துள்ளனர். எனவே கோஸ்ட் நகரம் போர்க்களம் போல காட்சி அளிக்கிறது.

ஜப்பான் நிலநடுக்கம்

மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் 130க்கும் மேற்பட்ட மக்கள் நிலநடுக்கத்தின் காரணமாக பலியாகி இருக்கலாம் என்றும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது. எதுவாக இருப்பினும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ள மக்களின் கதி என்னவென்று தெரியாததால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் மக்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web