நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து!! பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு!!

 
பலி


துருக்கியில்  பார்ட்டின் மாகாணத்தில்  அமஸ்ரா நகரில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் அக்டோபர் 14ம் தேதி  நேற்று முன்தினம் மாலை 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம்போல்  பணியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதனால் சுரங்கத்தின் பெரும்பாலான இடங்களில் மிகப்பெரிய அளவில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

துருக்கி

மேலும் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கித்தவித்தனர். தீப்பிடித்ததால் கத்தி கூச்சலிட்டனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்  தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர் . விடிய விடிய மீட்பு பணிகள் நடைபெற்றன.

துருக்கி

40 பேர் பலியானதாகவும் 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் பலர்  இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக  துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web