ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர்!! தட்டித் தூக்கிய காவல்துறை!!

 
கேதர் பிள்ளை

சமீபகாலமாக எடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏடிஎம் களில் பாதுகாப்பு நடவடிகக்கைகளும், கண்காணிப்புக்களும் அதிகரித்து வருகின்றன. இருந்த போதிலும் கொள்ளை சம்பவங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் சென்னை பெரியமேடு வீராசாமி தெருவில் அமைந்துள்ளது  'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' வின் ஏ.டி.எம். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்  இரவு  மர்ம வாலிபர் ஒருவர் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த ஏடிஎம் மையத்தின் கட்டுப்பாடு பெங்களூருவில் உள்ளது. இதைத்தொடர்ந்து ஏடிஎம் எந்திரத்தில் கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் காட்டியுள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னை பெரியமேடு ஏடிஎம் மையத்தின் மேலாளர் சந்திரசேகருக்கு, பெங்களூருவில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சிய¬ட்நத சந்திரசேகர், பெரியமேடு போலீசாருக்கு கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து தகவல் கொடுத்தார். விரைந்து சென்ற போலீசார், ஏ.டி.எம். மைய எந்திரத்தை ஆய்வு செய்தனர். அதிர்ஷ்டவசமாக எந்திரத்தில் இருந்த பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடிவந்தனர்.

இந்நிலையில், சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர், கேதர் பிள்ளை(33) என்பதும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கேதர் பிள்ளை கைது செய்யப்பட்டார்.ஆள் நடமாட்டம் அதிகமுள்ள பெரியமேடு பகுதியில் இரவு நேரத்தில் ஏடிஎம் மையம் கொள்ளையடிக்க மர்ம நபர் முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்டு கொள்ளையனை மடக்கிபிடித்த போலீசாரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web