வயலில் இறங்கிய கார்!! கயிறு கட்டி இழுத்த சோகம்!! கூகுள் மேப்பின் அலப்பறை!!

 
வயலில் கார்

கேரளா மாநிலம், மலப்புரத்திலுள்ள திரூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பொன்முண்டாவில் இருந்து புதுப்பரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலசித்ரா மலைபாதை வழியாக சென்றால் சீக்கிரமாக சென்றுவிடலாம் என கூகுள் மேப் காட்டியுள்ளது.

வயலில் கார்

இதையடுத்து, அப்பகுதி வழியே செல்ல முடிவு செய்து, காரை இயக்கியுள்ளனர். ஆனால் கூகுள் மேப் பாலச்சிராவுக்கு செங்குத்தான பாதை வழியாக சென்றது. அங்கு திடீரென சாலை முடிந்து, கார் நெல் வயலில் இறங்கியது. முன்னால் இருந்ததெல்லாம் நீர் நிறைந்த வயல். 

இரவு நேரம் என்பதால் காரை எடுக்க முடியாத சூழ்நிலையால் காரை அங்கேயே விட்டுவிட்டு சாலைக்கு நடந்து சென்று வேறு வாகனத்தின் மூலம் பயணத்தை அந்தக் குடும்பத்தினர் தொடங்கினர். மறுநாள் காலை, உள்ளூர் மக்கள் காரை கயிறுகட்டி சிரமப்பட்டு இழுத்து காரை சாலைக்கு கொண்டு வந்தனர். 

வயலில் கார்

இதேபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளன. கடந்த மே மாதம் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் கேரளாவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் குறப்பந்தரா-கல்லாரா சாலையில் உள்ள குறப்பந்தரா கடவு பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் கூகுள் மேப்பைப் பயன்படுத்தி நாம் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் என்பது உண்மைதான் என்றாலும் இரவு நேரங்களில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web