இன்றுடன் மலர்க்கண்காட்சி நிறைவு!! குவியத் தொடங்கிய மக்கள் வெள்ளம்!!

 
மலர் கண்காட்சி

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா ஜூன் 3ம் தேதி  அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதனை  முன்னிட்டு அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன் ஒரு பகுதியாக ஊட்டி மலர் கண்காட்சிக்கு இணையாக சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது.இந்த  மலர் கண்காட்சியை பார்வையிட பொதுமக்கள்  காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50ம், மாணவர்களுக்கு ரூ.20ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மலர் கண்காட்சி
இந்த கண்காட்சிக்காக பெங்களூரு, கிருஷ்ணகிரி, உதகை, புனே, ஏற்காடு, கொடைக்கானல் உட்பட அனைத்து  பகுதிகளில் இருந்து  200க்கும் மேற்பட்ட மலர் வகைகள் கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இக்கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி, சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன்  கண்காட்சிக்கு வரும் மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக செல்பி ஸ்பாட் வைக்கப்பட்டுள்ளது

மலர் கண்காட்சி

மக்களை கவரும் வகையில்  கவிஞர் பாரதியார், முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி இவர்களின்  சிற்பங்களும், ஸ்டாலின் முகத்தை போல் செதுக்கப்பட்ட பழமும் அமைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இதனால் கண்காட்சியை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் மக்களின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக  மலர் கண்காட்சி நடத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web