போதையுடன் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்!! மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்!!

 
போதை

ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள அனுப்பர்பாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தில் உள்ள  மாணவ, மாணவிகள் மொத்தம் 51 பேர் கல்வி கற்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் சேவியர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு  இலவச பீர்! அதிரடி அறிவிப்பு!

பள்ளிக்கு வரும் தலைமை ஆசிரியர் ஜான் சேவியர் எப்போதும் மதுபோதையில் தள்ளாடிக் கொண்டே வந்து இருக்கிறார். மேலும் பணி நேரத்திலும் மது அருந்தவிட்டு வகுப்புறையில் பாடம் நடத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளார். இது குறித்து மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிலர் தங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழ்களை பெற்று வேறு பள்ளியில் அவர்களை சேர்த்துள்ளனர்.

இவ்வாறு மொத்தம் 17 பேர் பள்ளியில் இருந்து மாறி சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மதுபோதையுடன் தள்ளாடியபடியே பள்ளிக்கு நுழைய முயன்ற ஜான் சேவியரை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.அடுத்த கட்ட நடவடிக்கையாக மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியர் ஜான் சேவியருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர், சத்திய மங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் உள்ளிட்டோர் பள்ளிக்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஈரோடு

மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டிய ஆசிரியர் பணியில் உள்ள தலைமை ஆசிரியரே இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொள்ளலாமா? இதை பார்க்கும் மாணவர்களின் மனநிலை என்னவாகும்? எனவே தலைமை ஆசிரியர் ஜான் சேவியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web