தொடர்ந்து குறைகிறது தங்கம் விலை! நகைபிரியர்கள் மகிழ்ச்சி!

 
தங்கம்

தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகைப் ப்ரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தங்கத்தை தங்கமாகவே வாங்கும் போக்கு இந்தியாவில் வேகமாக மாறி வருகிறது. தங்கம் வாங்குவதில் இந்தியர்களுக்கு இருந்த பழைய ஆர்வம் மீண்டும் துளிர்விடுவது கடினம் என்கிறது உலக தங்க கவுன்சிலின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. தங்கத்திற்கு பல முனைகளில் இருந்து அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. 

தங்கத்தின் நுகர்வை குறைக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வயிறு எரியும் அளவுக்கு தங்கத்தின் மீது வரி மேல் வரி விதித்து வருகிறது. இப்படி செய்வதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்துக் கொள்ள முடியும் என்று அரசு கருதுகிறது. பணமதிப்பிழப்பு போன்ற அரசின் நடவடிக்கையால் தங்கத்திற்கான தேவை அதிகரித்தது வருவதாக கூறப்படுகிறது.

தங்கம்

சென்னையில் கடந்த இரு நாட்களாக ஆபரண தங்கம் விலை குறைந்து விற்பனையான நிலையில், இன்று மூன்றாவது நாளாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80-க்கு குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து, ரூ.4,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ரூ.37,280-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,825-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து, ரூ.3,817-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து, ரூ.61,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web