தொடர்ந்து எகிறும் தங்கம் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

 
தங்கம்

தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இரண்டு நாட்களாக கிராமுக்கு சிறிதளவு குறைந்தாலும், அடுத்த நாள், சேர்த்து வைத்தாற் போல் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க திட்டமிடுகின்றன. ஆக இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். அதோடு இந்தியாவிலும் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவும் தேவையினை குறைக்கலாம். ஆக இதுவும் அழுத்தத்தினை கொடுத்துள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் இடிஎஃப்களில் இருந்தும் முதலீடுகள் வெளியேற ஆரம்பித்துள்ளன.

தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் வட்டி விகிதமானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சர்வதேச நாணய நிதியம் உலகப் பொருளாதாரம் இருளடைந்த நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளது.

தங்கம்

சீனா மற்றும் இந்தியாவில் மீண்டும் கொரோனாவின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.இது மேற்கொண்டு தேவையினை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று மேலும் அதிரடியாக உயர்ந்து, இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32-க்கு உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 13 ரூபாய் உயர்ந்து, ரூ.4,689-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து, ரூ.37,512-க்கு விற்பனையாகிறது. 

இன்று (நவம்பர் 24) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 136 ரூபாய் சரிந்தது!

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,830-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 11 ரூபாய் உயர்ந்து, ரூ.3,841-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து, ரூ.62,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web