எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் இரு மடங்கு உயர்வு! சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்!

 
டெல்லி எம்.எல்.ஏ

எம்.எல்.ஏ.க்களின் சம்பள விகிதத்தை சுமார் 66 சதவிகிதம் உயர்த்தி நேற்று டெல்லி சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. டெல்லியில், எம்.எல்.ஏ.க்களின் இந்த சம்பள உயர்வு பொதுமக்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டெல்லியில் இன்னும் சாக்கடையும், சேரும், சகதியுமாக நிறைய இடங்கள் இருக்கின்றன. அரசு அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை இருமடங்கு உயர்த்தியிருப்பதாக சமூக வலைத்தளங்களிலும் மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். டெல்லி சட்டசபையின் முதல்நாள் மழைகால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ துர்கேஷ் பகத் மற்றும் அனைத்து எம்எஏக்களும் கலந்து கொண்டனர்.

டெல்லி அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் ஊதியம் மற்றும் இதர படிகளை உயர்த்தக் கோருவது உள்ளிட்ட 5 மசோதாக்கள் நீண்ட விவாதத்திற்கு பின்னர் நேற்று டெல்லி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு ஆளும்கட்சியைச் சேர்ந்த ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று மசோதாக்கள் நிறைவேறியதைத் தொடர்ந்து இன்றும் சட்டமன்றம் கூடுகிறது. இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நேற்றைய மசோதாக்களின் விவாதத்தின் முடிவில் பேசிய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அரசியலில் திறமை மேம்பாடு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டெல்லி எம்எல்ஏக்களின் சம்பளம் மற்றும் படிகள் ரூ.54 ஆயிரத்தில் இருந்து ரூ.90 ஆயிரமாக உயர்த்தபபடுகிறது. இதற்கான வரி செலுத்துவோருக்கு நன்றி தெரிவிப்பது சட்டமன்றத்தின் கடமை’’ என்று பேசினார்.

சம்பள உயர்வு மசோதாக்கள் நிறைவேற்றப்பட சில காலம் ஆகலாம். இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதைத்தொடர்ந்து டெல்லி அரசாங்கத்தின் நீதி மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மாதம் தோறும் ரூ3000/- ! ஸ்டாலினை முந்திய கெஜ்ரிவால்!
இந்த சம்பள உயர்வு மசோதாக்களின்படி டெல்லி அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமைக்கொறடா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவர். இது குறித்து சட்டமன்ற அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் பெறுவது டெல்லி எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லி முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், தலைமைக்கொறடா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் சம்பளம் மற்றும் படிகள் ரூ.72 ஆயிரத்தில் ரூ.1,72,000 ஆக உயர்த்தப்படும்’’ என்று தெரிவித்தார். சம்பள உயர்வு படி உயர்வு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் அடங்கிய சட்டமசோதா விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று அமலாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web