ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலித்தவர்!! வைரலாகும் கமலின் நெகிழ்ச்சி ட்வீட்!!

 
கமல், கலைஞர்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. முதல்வர் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதனையடுத்து சென்னை மெரினாவில் கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார்.


கலைஞரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், மநீம கட்சி தலைவரும் ,நடிகருமான கமலஹாசன்  கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனாவிலிருந்து  குணமடைந்து  வீடு திரும்பிய கமல்!!

அதில், ‘எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.’ எனத் தெரிவித்துள்ளார். இவரது ட்வீட் இவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web