இன்றே கடைசி... 13,331 தற்காலிக பணியிடங்கள்! எங்கே.. எப்படி விண்ணப்பிப்பது? முழு விபரம்!

 
ஆசிரியர் பணி

தமிழக அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள். அதனால மிஸ் பண்ணாம, உடனடியா அப்ளை பண்ணுங்க. எங்கே... எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன சான்றிதழ்கள், கல்வித் தகுதி தேவை என்று பார்க்கலாம்.

இந்த பணிய்டிஅங்களை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் , பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்யலாம் என  தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. அதன்படி, 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும்  3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்ப  உத்தரவிடப்பட்டது.

விண்ணப்பம்


இந்நிலையில்,தமிழகத்தில் காலியாகவுள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்று ஜூலை 6ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. ஏற்கெனவே TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் உள்ளூர் நபர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் நேரிடையாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

ஆசிரியர்கள் கூட்டம்

இந்த விண்ணப்பங்களை தற்காலிக நியமனம் கோரும் பள்ளித் தலைமையாசிரியருக்கு மாவட்டக் கல்வி அலுவலர் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் சரிபார்க்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் இன்று ஜூலை 6 ம் தேதி இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web