இன்று தமிழகம் முழுவதும் ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! ஜிஎஸ்டி.க்கு வலுக்கும் எதிர்ப்பு!

 
அரிசி ஆலை

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு ஆண்டுகள் உருண்டோடினாலும், இன்னமும் அதில் உள்ள குழப்பங்கள் தீரவில்லை. தீப்பெட்டி, மெழுவர்த்தி போன்ற குடிசைத் தொழில்களுக்கும் ஜிஎஸ்டி விதித்து சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் ஐந்து சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

உணவுப் பொருட்களுக்கான இந்த வரியை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் இந்த ஜிஎஸ்டி விதிப்பை எதிர்த்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இது பற்றி சேலம் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் சியாமளநாதன் நிருபர்களிடம் கூறும் போது, உணவு பொருட்களுக்கு எப்போதும் வரி உயர்வு இருக்கக்கூடாது. மேலும் உணவுப் பொருட்களின் மீது வரி விதித்தால் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை எளிய மக்களாகத் தான் இருப்பார்கள். நாட்டில் ஏழை எளிய நடுத்தர மக்கள் என்பது சதவீதம் பேர் உள்ளனர். இதுவரை அரிசிக்கு எந்த அரசும் வரி விதித்தது இல்லை.‌ இப்போது ஆளும் மத்திய அரசு 5 சதவீதம் ஜிஎஸ்டியை விதித்துள்ளது.

அரிசியின் மீதான 5 சதவீத ஜிஎஸ்டியை நீக்க கோரி இன்று அரிசி ஆலை உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். அரிசி மீதான ஜிஎஸ்டி வரிக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்  என்று கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web