போட்றா வெடிய!! இன்று முதல்வருக்கு 2 வது திருமணம்!!

 
marriage

 

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் இன்று குர்ப்ரீத் கவுர் என்கிற டாக்டரை 2வதாக திருமணம் செய்ய உள்ள செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரசை தோற்கடித்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வெற்றிக்கனியை பறித்தது. இதன் மூலம் அக்கட்சி சார்பாக வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றார். இவர் திரையுலகில் இருந்து விலகி அரசியலில் கால் தடம் பதித்தவர்.

பகவந்த்மான்

பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் ஏற்கனவே திருமணமானவர். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு தனது முதல் மனைவியைப் பிரிந்தார். முதல் திருமணத்தின் வாயிலாக 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 2வதாக திருமணம் செய்ய உள்ளார்.

முதல்வர் பகவந்த்மானுக்கும், குர்ப்ரீத் கவுர் என்கிற மருத்துவருக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவிற்கு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களுக்கும் மற்றும் முதல்வர் பகவந்த் மானின் தாய், சகோதரி, உறவினர்கள் உட்பட குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் முதல்வர் பகவந்த்மானுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

marriage

கடந்த 1ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மேலும் வீடு தேடி ரேஷன் திட்டத்தையும் ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் மாநில அரசு வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web