இன்று 68வது தேசிய விருதுகள் திரைப்பட விழா!! யார் யாருக்கு விருதுகள்?! எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!!

 
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் திரைப்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து தேசிய விருது வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கௌரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக சிறந்தப் படம், நடிகர், நடிகை, இயக்கம் என பல பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்படுகின்றன.

தேசிய திரைப்படவிருது வழங்கும் விழா

இந்நிலையில், 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு இன்று மாலை 4 மணிக்கு 68-வது தேசிய விருது அறிவிக்கப்படவுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து எந்தெந்த படங்கள் மற்றும் படத்தில் நடித்தவர்கள் என யார் யாருக்கு விருதுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய விருதுகள்

கடந்தாண்டு நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த படத்திற்கான விருதினை அசுரன் படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனும், சிறந்த நடிகருக்கான விருதை அசுரன் படத்திற்காக தனுஷும், சிறந்த துணை கதாபாத்திரத்திற்காக சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதியும் பெற்றிருந்தனர். அத்தோடு தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web