தக்காளி அதிரடி விலைக் குறைப்பு!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
தக்காளி

இந்தியாவின் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக  தொடர் மழை, விளைச்சல் மற்றும் உற்பத்தி பாதிப்பு, கோடை வெயில் காரணமாக தக்காளி வரத்து குறைந்தது. இதன் எதிரொலியாக  தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி குறைந்ததால் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. அதன்படி ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை ரூ100க்கும் சில்லறை கடைகளில் ரூ120க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தக்காளி தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு விற்பனை மையங்கள் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ85க்கு விற்பனை செய்து வந்தன. இருந்த போதிலும் தக்காளி விலை குறையவில்லை. கடந்த வாரத்தில் சில்லறை கடைகளில் கிலோ ரூ80க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது. சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகரித்து உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  தக்காளி இன்று கிலாவிற்கு ரூ.20 வரை குறைந்து  முதல் தர தக்காளி கிலோ ரூ.40 க்கும், இரண்டாம் தர தக்காளி கிலோ ரூ.30 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ தக்காளி ரூ. 85-க்கு விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு..!

பொதுவாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து 1000 டன்னுக்கும் அதிகமான அளவில் வந்து சேர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக  கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மழை அதிகரித்ததன் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால்  சென்னை கோயம்பேடு சந்தைக்கு போதிய அளவு தக்காளி வரவில்லை. கடந்த வாரங்களில் 500 டன்கள் மட்டுமே வந்துகொண்டிருந்ததால் இந்த விலையேற்றம் தொடர்ந்து கொண்டிருந்தது.  தற்போது தக்காளியானது 800 முதல் 900 டன்கள் அளவிற்கு வந்துள்ளன. இனி வரும் நாட்களில் தக்காளியின் வரத்து மேலும் அதிகரிக்கலாம். அப்போது தக்காளியின் விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web