சுற்றுலா பயணிகள் குளிக்க 7 நாட்களுக்கு தடை! காவிரியில் வெள்ளப்பெருக்கு!

 
ஒகேனக்கல்

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிரது. இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில்  தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததுள்ளதைத் தொடர்ந்து, கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், வெள்ளப்பெருக்கால், அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையிலும் கூட கடந்த 88 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி, தழும்பி நிற்கின்றன. 
ஒகேனக்கல்
இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்திற்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 17 ஆயிரம் கன அடி உபரி நீர்  அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.  இதன் காரணமாக காவிரி நுழைவிடமான கர்நாடக - தமிழக எல்லையில், தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரியில் தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளதால், ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.  இன்று காலை நிலவரப்படி 1, 20,000 கன அடியாக நீர் வரத்து அதிகரித்தது.  ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி ஆற்றின் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
ஒகேனக்கல்
இன்று காலையில் இருந்தே காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web