நடுக்கடலில் தத்தளிக்கும் சுற்றுலாப் பயணிகள்!! சொகுசுக்கப்பலுக்கு அனுமதி மறுப்பு!!

 
சொகுசுக் கப்பல்

தமிழக அரசு சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு புதிய முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசுக்கப்பல் பயணத்தை அறிமுகப்படுத்தியது. இந்த பயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளிகள், கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் இதற்காக பலரும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். 

சொகுசுக் கப்பல்
இந்நிலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் புதுச்சேரியில் அனுமதி தரப்படாததால் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும்  தகவல் வெளியாகியுள்ளது. 2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அத்துடன்  சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்கிற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை அறிமுகம் செய்தது. சென்னையில் இருந்த புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலில் மக்கள் பயணம் செய்யும் வகையில் சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சொகுசுக் கப்பல்

2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் புதுச்சேரியில் அனுமதி தரப்படாததால் நடுக்கடலில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி அரசு அனுமதி அளிக்காத நிலையில் கீரப்பாளையம் லைட் ஹவுஸ் அருகே சொகுசு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web