திருடனை 15 கிமீ தூரம் கதற விட்ட ரயில் பயணிகள்!

 
திருடன்

திருடனை ரயிலின் ஜன்னல் கம்பியில் சுமார் 15 கி.மீட்டர் வரையில் பயணிகள், திருடனை கதற விட்டுள்ளனர்.  பீகார் மாநிலத்தில் செல்போன் திருடனை பொதுமக்கள் ஓடும் ரயிலின் ஜன்னலில் தொங்கவிட்டு 15 கீமீ அழைத்து வந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் இருந்து காகாரியாவுக்கு சென்றுக் கொண்டிருந்த பயணிகள் ரயில் சஹேப்பூர் கமல் நிலையத்தை அடைந்ததும், பங்கஜ் குமார் என்ற நபர் பயணிகளிடம் வழிபறி செய்து வந்துள்ளார்.


சஹேபூர் ரயில் நிலையத்தில், ரயிலின் ஜன்னல் அருகே சென்று, பயணிகளை நோட்டமிட்ட பங்கஜ், ஒருவரின் செல்போனைத் திருட பிளான் செய்துள்ளார்.  பிளாட்பாரத்தில் இருந்து ரயில் மெல்ல கிளம்பும் நேரமாகப் பார்த்து, ஜன்னல் வழியாக கையை விட்டு, பயணியின் செல்போனை திருட பங்கஜ் முயற்சித்துள்ளார்.

திருடன் ஒருவன் செல்போனைத் திருட முயற்சிப்பதைப் பார்த்த பயணி, சமயோசிதமாக செல்போனைப் பிடுங்காமல், திருடனின் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டார். அதற்குள் ரயில் பிளாட்பாரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து நகர ஆரம்பித்து விட்டது.

ஜன்னல் வழியே கைகள் மாட்டிக் கொண்ட திருடன், என்ன செய்வது எனத் தெரியாமல், செல்போன் கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை சரி நம்மை விட்டால் போதும் என நினைத்துள்ளார்.

திருடன்

ஆனால் அன்றைய பொழுது பங்கஜூக்கு சரியாக விடியவில்லைப் போல. அந்த பயணியோடு சேர்ந்து, பிற பயணிகளும் ஒன்றாக பங்கஜூன் கைகளைக் கெட்டியாக பிடித்துக் கொள்ள ரயில் நிலையத்தைத் தாண்டி, ரயில் சென்று கொண்டிருந்தது.

செல்ப்போன் திருட நினைத்தது உயிருக்கே ஆபத்தாகி விடும் போல என்ற பயத்தில் தனது மற்றொரு கையையும் ஜன்னுக்குள் விட்டுக் கொண்டு, இறுக்கமாக ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு,  ஓடும் ரயிலில் பங்கஜ் அந்தரத்தில் தொங்கியபடியே பயணம் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில், கை ரொம்ப வலிக்கிறது. என் கை உடைந்து விடும் போல.. தயவு செய்து விட்டு விடுங்கள் என எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பயணிகள் அவருடைய கையை விடுவதாக இல்லை. சுமார் 15 கிமீ தூரம் பங்கஜ்ஜை ஜன்னல் கம்பிகளின் வழியே தொங்க விட்டப்படியே அழைத்துச் சென்று, அடுத்த ரயில் நிலையமான காகாரியா வந்த பின் தான் கையை விடுவித்துள்ளனர்.

ஜன்னல் கம்பியில் தொங்கிய படி பங்கஜ் கெஞ்சி கதறும் வீடியோவை பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில், பங்கஜ் குமாரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 

From around the web