2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரயில் சேவை!! உற்சாகத்தில் ரயில் பயணிகள்!

 
ரயில்

 

மதுரை ரெயில்வே கோட்டம் அறிவித்தபடி, 2 ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

காலை, மாலை என இருவேளைகளில் இயங்கி வந்த மதுரை& ராமேசுவரம் இடையிலான ரெயில் சேவை கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் பயணித்து வந்த பயணிகள் மிகவும் அலைச்சலுக்குள்ளானார்கள். தற்போது கொரோனா தொற்று குறைந்து வந்ததால் பயணிகள் மீண்டும் ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி தெற்கு ரெயில்வே பொது மேலாளரிடம் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மனு கொடுத்து இருந்தார்.  அதைத்தொடர்ந்து மக்கள் கோரிக்கையை ஏற்கும் வகையில், இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ரயில்

அதன்படி கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்தப்பட்ட மதுரை& - ராமேஸ்வரம் வழித்தடத்தில் காலை நேர பயணிகள் ரெயில், ராமேஸ்வரம்&- மதுரை இடையிலான வழித்தடத்தில் மாலை நேர பயணிகள் ரெயில்களை இன்று முதல் மீண்டும் இயக்குவதாக தெற்கு ரெயில்வே ஏற்கனவே அறிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்த இரு வழித்தட ரெயில்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், உச்சிபுளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம், சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என கால அட்டவணையில் குறிப்பிட்பட்டுள்ளது. இதனால்ம பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரயில்

அட்டவணையில் அறிவிக்கப்பட்ட படி இன்று காலை ரெயில், 6.35 மணிக்கு மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. நீண்ட நாளுக்கு பிறகு இந்த வழிதடத்தில் ரெயில் இயக்கப்படுவதால், பலரும் மகிழ்ச்சியாக தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web