மாணவி சத்யாவை இருமுறை கொல்ல முயற்சித்தேன்! சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்!

 
சத்யா

மாணவி சத்யா, காதலித்து விட்டு, தற்போது எவ்வளவு வற்புறுத்தியும் காதலை நிராகரித்ததால், சத்யாவை கொலைச் செய்ய திட்டமிட்டு, இருமுறை கொல்லவும் முயற்சி செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் சதீஷ் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா, கொலைச் செய்யப்பட்ட  நிலையில், சத்யாவின் தந்தை அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணமடைந்ததாக சொல்லப்பட்ட நிலையில், மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

மகளும், தந்தையும் அடுத்தடுத்து மரணமடைந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாணவி சத்யாவைக் கொலைச் செய்த சதீஷ், போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியை திட்டமிட்டே கொலைச் செய்ததாகவும், மேலும் இரு முறை கொலைச் செய்ய முயற்சி செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதாக வெளியான தகவல் அதிர வைத்துள்ளது.

சத்யா

சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பில் வசித்து வந்த 47 வயதான மாணிக்கம். இவர் கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.  இவரது 43 வயதான மனைவி ராமலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும் மகள் இறந்த துக்கம் தாளாமல் உடல் நலக் குறைபாட்டால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களுடைய மகள் 20 வயது சத்யா. இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தயாளனின் மகன் 23 வயதான சதீஷ். இவர் சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் பணிபுரிந்து  வந்தார். இந்நிலையில் சத்யா,  சதீஷ் இருவரும்  காதலித்து வந்தன. கடந்த சிலமாதங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.நேற்று வழக்கம் போல்  கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சத்யா, முதலாவது நடைமேடையில் காத்திருந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த சதீஷ், சத்யாவிடம் சென்று பேசினார். இதில் வாக்குவாதம் முற்றியது. 

சத்யா சதீஷ்

ஆத்திரமடைந்த சதீஷ், தாம்பரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த மின்சார ரயிலில் முன்பு சற்றும் எதிர்பாராத வகையில், சத்யாவை தள்ளிவிட்டார். இந்த கொடூரக்கொலையில் சத்யா ரயில் சக்கரத்தில் சிக்கி, தலை துண்டித்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர விபத்தை நேரில் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. காவல்துறையினர்  ஈசிஆர் பகுதியில் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியை திட்டமிட்டே கொலைச் செய்ததாக சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மகளை இழந்த சோகத்தில் சத்யாவின் தந்தை மாணிக்கம், மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். மாரடைப்பில் மரணமடைந்ததாக சொல்லப்பட்ட நிலையில், மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியானது.

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web