இன்று முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 
ரயில் டிக்கெட்

இன்று முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மக்களின் தேவைகளை பொறுத்து மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. படிப்படியாக இவை சீரமைக்கப்பட்டு தற்போது கொரோனாவிற்கு முந்தைய அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

ரயில்
அந்த வகையில் கடந்த  3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  மன்னார்குடி - மயிலாடுதுறை ரயில் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி இன்று முதல் முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயிலாக மன்னார்குடி ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்

இந்த ரயில் மன்னார்குடியில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு 10.40 மணிக்கு சென்றடையும் எனவும், மறுமார்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து மாலை 5 மணிக்கு ரயில் புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு மன்னார்குடி சென்றடையும் எனவும்  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.    

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web