பள்ளியில் வேரோடு சாய்ந்த மரம்!! ஒரு மாணவர் பலி!! 20 மாணவர்கள் படுகாயம்!!

 
மரம்


தனியார் பள்ளியில் வேரோடு மரம் சாய்ந்த விபத்தில் மாணவர் ஒருவர் பலியான சம்பவம் சண்டிகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கார்மல் கான்வென்ட் பள்ளி சண்டிகரில் உள்ள 9வது செக்டர் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு 70 அடி உயரம் கொண்ட 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் அந்த பகுதியில் பெரும் பெரிய அடையாளமாக திகழ்ந்து வந்தது.

இந்நிலையில் நேற்று காலை இந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்த விபத்தில் மரத்தின் அருகே நின்று கொண்டிருந்த மாணவர் மீது விழுந்தது. இதில் அவர்  ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அங்கிருந்த பள்ளி ஊழியர் ஒருவர் மற்றும் 19 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் படி விரைந்து வந்த மீட்புப்படையினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்தவர்களில் 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


மரம் வேரோடு சாய்ந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று அம்மாநில உள்துறை செயலாளர் நிதின் யாதவ் தெரிவித்தார்.
பள்ளி வளாகத்தில் இருந்த மரம் விழுந்து மாணவர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web