உஷார் மக்களே!! 1000ஐ தாண்டிய குரங்கு அம்மை பாதிப்புக்கள்!! உலக சுகாதார மையம் எச்சரிக்கை!!

 
குரங்கு வைரஸ்

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக உலக நாடுகள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்து வருகின்றன. தற்போது கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி  இதுவரை 29 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  

குரங்கு அம்மை

மொத்தம் 1000க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.  இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் விடுத்த செய்திக்குறிப்பில் குரங்கு அம்மை நோய் பரவல் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருந்தாலும், தற்போது வரை முற்றிலும் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை

குரங்கு அம்மை  பாதிப்பு ஏற்பட்டவர்கள், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் . நெருங்கிய தொடர்புகளால் மட்டுமே இதுவரை குரங்கு அம்மை பரவி வருகிறது.  காற்றின் மூலமாக குரங்கு அம்மை பரவுகிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக  உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web