உஷார்! ஆதார் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை! இப்படியெல்லாம் பயன்படுத்தாதீங்க!

 
ஓய்வூதியம் பெற ஆதார் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

ஆதார் கார்டு பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் ஆதார் கார்டை இப்படியெல்லாம் பயன்படுத்தாதீங்க. அலட்சியமா இருக்காதீங்க. ஆதார் அட்டையில் 12 இலக்க தனித்துவமான அடையாள எண் இடம்பெற்றுள்ளது. இது மக்கள் தொகை (குடியிருப்பு முகவரி தகவல்) மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை புகைப்படத்துடன் கொண்டதாகும். இதன் தனித்தவம் என்னவென்றால் ஆதார் அட்டை எண்கள் 0 மற்றும் 1 என்ற எண்களில் தொடங்குவது இல்லை.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் 2ம் இடம் வகிக்கும் இந்தியாவில், உள்ள குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்கி ஆதார் அட்டை தரவுத்தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

ஆதார் எண்ணை பான் கார்டு, வங்கி ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் இணைக்கும் பணி மூலம் அனைத்து தகவல்களும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதன் மூலம் நாட்டில் உள்ள மக்களுக்கு அனைத்து சேவைகளும் சென்று சேரும் வண்ணம் மத்திய அரசால் வசதி செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டுகளை கடைகளில் நகல் எடுக்கும் போதும், பதிவிறக்கம் செய்யும் போதும் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  கேட்டுக் கொண்டுள்ளது. 

இது குறித்து துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆதார் அட்டையின் புகைப்பட நகலை யாரிடமும் வழங்கக் கூடாது. அதனை பெறும் நிறுவனங்கள் அவற்றை தவறான வழியில் பயன்படுத்தி முறைகேடுகளை செய்திடக்கூடும். மேலும் ஆதார் அட்டைகளை வெளி இடங்களுக்கு கொண்டு சென்று நகல் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கணினி மையங்களில் இவற்றை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்த பின்னர் அதனை கணினி சேகரிப்பில் இருந்து டெலிட் செய்துவிட வேண்டும்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

“மழை, வெயிலால் பாதிக்கப்படாத புதிய பிளாஸ்டிக் ஆதார் கார்டு?!” ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி!!

ஆதார் அட்டையில் சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம், கருவிழி ஸ்கேன், கைரேககள் ஸ்கேன், முகவரி போன்ற தகவல்கள் இருப்பதால் அவற்றை தவறானவர்களின் கைகளில் கிடைக்காத வண்ணம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை