உஷார்! குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறலாம்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

 
குரங்கு காய்ச்சல்

இப்படி தாங்க ஆரம்பத்துல கொரோனாவும் சீனாக்காரன் கண்டுபிடிச்சான். சீனாக்காரனுங்க.. கண்டதையும் சாப்பிடுறாங்க... அவனுங்களுக்கு வேணும் என்று டீக்கடைகளில் பேப்பர் படித்து விட்டு, கெக்கே..பிக்கே என சிரித்த நம்மூர்ல தான், சீனாவை விட கொரோனாவுல உயிர்பலி அதிகம். அதனால, நாங்க நிலவேம்பு சாப்பிடறோம்.. தினமும் இஞ்சி, பூண்டு சேர்த்துக்கறோம்னு சொல்லாம, கொஞ்சம் பாதுகாப்பாகவும் இருங்க. இஞ்சி, பூண்டு என நம்முடைய உணவுகளே மருந்துகள் என்பது நிஜம் தான். அவை நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பவை. நாம் செய்யும் மடத்தனமான காரணங்களுக்கு அவை என்ன செய்யும். சமூக விலகலை கடைப்பிடியுங்க. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. தற்போது பெரும்பாலான நாடுகள் தடுப்பூசி , சுகாதார சுத்தம் மூலம் அவைகளை கட்டுப்படுத்தி உள்ளன. இந்நிலையில் குரங்கு அம்மை உலக நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உட்பட சுமார் 20 நாடுகளில்  200 பேர்  குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

குரங்கு அம்மை

இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச் சேர்க்கையாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என ஒரு மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை பரவல் து குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 'உலக தொற்று அபாய தயார்நிலை' குழுவின் இயக்குனர் சில்வி பிரையன்ட்  விடுத்த செய்திக் குறிப்பில் ''மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கு அம்மை வேகமாக பரவாது. ஆனால் படிப்படியாக  இது சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது.

who

இதை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தடுப்பூசியும், முறையான சிகிச்சையும் மட்டுமே  இதற்கு முழுமையான தீர்வு. மேலும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதே, இதன் பரவலை தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலகட்டங்களில் குரங்கு காய்ச்சல் உலகம் முழுவதும் இன்னும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கும் அபாயம் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web