உஷார்!! மீண்டும் வீடுகளில் கொரோனா ஸ்டிக்கர்!! தீவிரமாகும் கட்டுப்பாடுகள்!!

 
மா.சுப்பிரமணியன் கொரோனா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து விமான நிலையங்களில்  வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை தருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா

தற்போது தமிழகம் முழுவதும்  கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த  எண்ணிக்கை 1,632பேர். இது குறித்த  ஆலோசனை கூட்டம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் உட்பட சுகாதாரத்துரை  நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள்  எடுக்கப்பட்டன. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மீண்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் மட்டும் கொரோனா பாதித்த பகுதிகளாக 684 வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுப்பட்டுள்ளன.5க்கும் மேற்பட்ட கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கும் தெருக்களிலும் கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று முதல் தினமும் 5000 பேருக்கு ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1.44 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாமல் உள்ளவர். அவர்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

கொரோனா
அதே நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களையும்  சுகாதாரத்துறை தீவிரமாக  கண்காணித்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அத்துடன் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்களும்  பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள  தாமாக முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web