உஷார்!! 104 பேருக்கு குரங்கு அம்மை உறுதி!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

 
குரங்கு அம்மை

கடந்த  2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பெரும்பாலான நாடுகள் மக்களுக்கு செலுத்தியுள்ளன. தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில் அடுத்தடுத்து ஒமிக்ரான், உருமாறிய கொரோனா, டெல்டா, டெல்டா ப்ளஸ், நிபா வைரஸ், ஸ்வைன் ப்ளூ எனத் தொடர்ந்து அடுத்தடுத்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

குரங்கு அம்மை

தற்போது அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உட்பட சுமார்  20  நாடுகளில்  200 க்கும் அதிகமானவர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

குரங்கு வைரஸ்

இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த சில நாட்களிலேயே மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது இங்கிலாந்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது.இந்த எண்ணிக்கை பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web