உஷார்!! அடுத்த 4 நாட்களுக்கு அனல் ஆரஞ்சு அலர்ட்!! வீட்டை விட்டு வெளியே வராதீங்க!!

 
வெயில்

இந்தியாவில் பல மாநிலங்களில் இன்னும் கோடை வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதற்கு முந்தைய ஆண்டுகளை விட நடப்பாண்டில் வெப்பநிலை அதிகமாக பதிவாகி இருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி கடந்த இரண்டு நாட்களாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் வெயில் அடிக்கிறது. இதனால் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக 44 டிகிரி செல்சியஸ் முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது.

வெயில்

இந்நிலையில், கடும் வெப்பத்தின் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஆர்.கே.ஜனமணி விடுத்த செய்திக்குறிப்பில்  வடகிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன்  அஸ்ஸாம், மேகாலயா மற்றும் அருணாச்சலப்பிரதேசம்  மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

வெயில்

வடமாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்கவில்லை என்றும் இதுகுறித்து கண்காணித்து வருவதாகவும், டெல்லியில் பருவமழை இன்னும் தொலைவில் உள்ளது என்றும் கூறியுள்ளார். கடும் வெப்பத்தின் காரணமாக தலைநகர் டெல்லிக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், டெல்லி, உத்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெப்பம் வாட்டி வரும் நிலையில் இன்னும் 4 நாட்களுக்கு தொடரும் எனவும் அதனால் மக்கள் கவனமாக வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web