வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளிக்கு மரணதண்டனை!! பரபரப்பு தீர்ப்பு!!

 
வாரணாசி குண்டு வெடிப்பு

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 2006ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வலியுல்லா கானை கைது செய்து சிறையில் அடைத்திருந்தது. இவ்வழக்கின் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவனுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை விதித்து காசியாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

வலியுல்லா கான்

உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் மார்ச் 7, 2006 அன்று சங்கட் மோகன் கோவில் மற்றும் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-கஹர் என்ற அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இதன்பின் காவல்துறை நடத்திய விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புதான் வாரணாசி குண்டு வெடிப்புக்கு காரணம் என தெரிய வந்தது.

court order

இதையடுத்து, இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பயங்கரவாதி முகமது வலியுல்லா கான் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டான். காசியாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 4-ம் தேதி நடந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியான முகமது வலியுல்லா கான் குற்றவாளி என அறிவித்தது.

இந்நிலையில், வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை0

From around the web