முதல்வரை நேரில் சந்தித்த விக்கி - நயன்!! வைரலாகும் புகைப்படம்!!

 
c

தமிழ் சினிமாவின் நட்சத்திர காதலர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.  'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலில் விழுந்தனர். திருமணம் குறித்து சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

காதலில் உருகும் நயன் , விக்னேஷ் சிவன்!! வைரலாகும் வீடியோ!

விரைவில்  திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் என நயன்தாரா தெரிவித்திருந்தார். விக்னேஷ் சிவன் உறுதி காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட வெளியீட்டில் இயக்குநர்  விக்னேஷ் சிவன்  திருமணத்தை உறுதிப்படுத்தியிருந்தார். இவர்களின் திருமணம்  ஜூன் 9ம் தேதி திருப்பதியில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் திருமண வரவேற்பு  சென்னை மகாபலிபுரத்தில் நடக்க இருப்பதையும் இதனை  தனியார் ஊடகம் ஒன்று நேரலை செய்ய இருப்பதகாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

காதலில் உருகும் நயன் , விக்னேஷ் சிவன்!! வைரலாகும் வீடியோ!

திருப்பதியில் நடைபெறும் திருமண நிகழ்வில் 150 விருந்தினர்கள் வரை கலந்து கொள்கின்றனர். திருமணத்திற்கு முதல் நாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மிக முக்கியமான பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதி  நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய் அஜித் சிவகார்த்திகேயன் உட்பட  பலர் இந்த திருமண வரவேற்பில் கலந்து கொள்ள இருக்கின்றனர். நேற்று  முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும்  தங்கள் திருமண அழைப்பிதழை வழங்கினர்.  இந்த சந்திப்பில்  உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web