வீடியோ!! ஸ்ரீமதி இரவு மாடிக்கு செல்லும் சிசிடிவி புட்டேஜ்!!

 
ஸ்ரீமதி

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி (17). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து, தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது.

ஸ்ரீமதி

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 12-ந்தேதி இரவில் பள்ளியில் இருக்கும் வீடியோ பதிவு ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், 2-வது தளத்தில் உள்ள பள்ளியின் ஒரு வகுப்பறையில் இருந்து வரண்டா பகுதியின் வழியாக ஸ்ரீமதி நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் வீடியோவில் தேதியானது 12-ம் தேதி என்றும், இரவு 9.29 மணி என்று என குறிப்பிடப்பட்டு இருந்தது. 

வகுப்பறையில் இருந்து வரும் ஸ்ரீமதி வரண்டாவில் தனியாக நடந்தபடி வந்து, பின்னர் மேல் தளத்துக்கு செல்லும் ஒரு படிக்கட்டில் ஏறிசெல்வது போன்ற காட்சி அதில் இடம்பெற்று இருந்தது. இதன் மூலம், இரவு நடந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டு விடுதிக்கு சென்ற மாணவி, அதன் பின்னர் தான் மரணம் அடைந்து இருக்கிறார். ஆனால் எந்த நேரத்தில், எவ்வாறு என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இரவு 10.30 மணியளவில் மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மறுநாள் காலை 6 மணியளவில்தான் உடலை, பள்ளியின் காவலாளி பார்த்ததாக மாணவியின் தாயார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web