வீடியோ!! காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவரை உயிருடன் மீட்கும் பரபரப்பு நிமிடங்கள்!!

 
காட்டாற்று வெள்ளம்

நீலகிரி மாவட்டம் உள்பட தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. அதன் எதிரொலியாக உதகை, கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

மழை

இதில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி கூடலூர் பகுதியில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது பெய்துவரும் மழையால் அப்பர்பவானி, அவலாஞ்சி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கூடலூரில் பெய்துவரும் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.


இந்நிலையில் நேற்று இரவு கூடலூர், நடுவட்டம், தேவாலா பந்தலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் கூடலூரில் அருகே மங்குளி பகுதியில் ஆற்றில் பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. அப்போது பாலத்தில் நடந்து சென்ற மூன்று பேரில் மாணிக்கம் என்பவர் ( 53) காற்றாற்று வெள்ளத்தில் தவறி விழுந்தார். அப்போது அவருடன் சென்ற சகநண்பர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட நபரை பத்திரமாக மீட்டனர்.

கனமழை காரணமாக மண்குழி பாலம் அடித்து செல்லப்பட்டதால் கிராமங்களுக்கு செல்லக்கூடிய போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கூடலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை மேற்கொள்ள வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருவமழை அதிகரிப்பின் பாதிப்பின் அளவும் எல்லை மீறி போகக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web