வீடியோ!! திருவிழாவில் தீவிபத்து!! அலங்கார பந்தல் நாசம்!!! சிதறி ஓடிய பக்தர்கள்!!

 
திருவிழா

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது  சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் அர்த்தநாரீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு  ஆண்டும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஆனித் திருவிழா  ஜூன் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி மக்களுக்கு குட்நியூஸ்!! உடனே முந்துங்க!! இன்று மிகப்பெரிய வாய்ப்பு!!

10ம் நாள் திருவிழாவான நேற்று அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய தெப்ப தேரோட்டம் நடைபெற இருந்தது. தெப்ப தேரோட்டத்தை காண சுமார் 2000 பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.  9.30 மணியளவில் கோவிலுக்கு தெற்கே வெடித்த பட்டாசுகளிலிருந்து  ஒரு  தீப்பொறி கோவில் முன்பு போடப்பட்டிருந்த கூரைப்பந்தலில் திடீரென்று விழுந்து விட்டது. இதனால் தீ மளமளவென எரிந்தது.

அலங்கார பந்தல் முற்றிலும் எறிந்து நாசமானது. இதைப்பார்த்ததும் தெப்பத்திருவிழாவை காண கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பெண்கள் கைக்குழந்தையுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வாசுதேவநல்லூர் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட்டதால் அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. இதற்கு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தீயணைப்பு துறையினருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web