BIG BREAKING!! விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

 
விஜய் மல்லையா

 


தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட கிங்பிஷர் நிறுவன தொழில் அதிபர் விஜய் மல்லையா, கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவானார். இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி விஜய் மல்லையா மீது வழக்கு ஒன்று தொடர்ந்தது. அதில், நீதிமன்ற உத்தரவை மீறி விஜய்மல்லையா தனது பிள்ளைகளுக்கு 40 மில்லியன் டாலர் அளவுக்கு பரிவர்த்தனை செய்ததாக குற்றம் சுமத்தியது.

விஜய் மல்லையா

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விஜய் மல்லையா மீதான குற்றத்தை உறுதி செய்து தீர்ப்பு அளித்தது.  இதனால் விஜய்மல்லையா தரப்பில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், விஜய் மல்லையா, நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் வாயிலாக கோர்ட்டில் ஆஜராக பலமுறை வாய்ப்பு அளித்தது. இருப்பினும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகமல் தட்டிக் கழித்து வந்தார்.

court order
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய்மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் 4 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 4 வாரத்திற்குள் ரூ.4 கோடி டாலர் பணத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web