பள்ளிக் கழிப்பறையை சுத்தம் செய்த விழுப்புரம் கலெக்டர்!! குவியும் பாராட்டுக்கள்!!

 
கலெக்டர்

ஜூன் 13 ம் தேதி நாளை மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. நாளையுடன் கோடை விடுமுறை முடிவடைகிறது. இதனையடுத்து பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. அதன் அடிப்படையில் பள்ளி வளாகங்கள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. 

லட்சுமணன்

அந்த வகையில் பள்ளியில் உள்ள குப்பைகள் அகற்றி சுத்தமாக வைத்திருத்தல், வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் தேக்க தொட்டி மற்றும் மின் இணைப்புகள் ஆகியவற்றை பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள் கொண்டு மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ‘நம் குப்பை நம் பொறுப்பு’ என்ற திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் நடந்து வருகிறது. சுத்தம் செய்யும் பணியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மோகன், சட்டமன்ற உறுப்பினர் இரா.லட்சுமணன் ஆகியோர் விழுப்புரம் அரசு மருத்துவமனை ரோட்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். 

விழுப்புரம்

அப்போது பள்ளியை சுத்தம் செய்த பணியாளர்கள் சரிவர கழிவறையை சுத்தம் செய்யாத பணியாளர் மீது கோபமடைந்த ஆட்சியர் மோகன், கழிவறையில் உள்ள கை அலம்பும் இடத்தினை தனது கையால் சுத்தம் செய்தார். மேலும், கடமைக்கென்று சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டாம் என பணியாளரிடம் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளி கழிவறைகள் வகுப்பறைகளை தனது வீட்டினை போன்று சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் இதனை கன்காணிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் மோகன் அறிவுறுத்தினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web