நகை வாங்கப் போறீங்களா?! இன்று முதல் இந்த முத்திரை இருக்கா பார்த்து வாங்குங்க!!

 
பிஐஎஸ்

இந்தியாவில் வீடுகளில் முதல் முதலீடு, சேமிப்பு என்பது  தங்க நகைகள் தான். எத்தனை தான் விலையேற்றம் இருந்தாலும் தங்கத்தின் மீதான மோகம் இன்னும் குறையவில்லை என்பதே ஒரு காரணமாக இருந்து வருகிறது. இதனால் தான்  இல்லத்தரசிகள்  என்னதான் விலை உச்சத்தில் இருந்தாலும் வாங்கியே தீர வேண்டும் என  நகைக்கடைகளில் இல்லத்தரசிகள் குவிந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் தங்கத்தின்  அதிகம் கொடுத்து வாங்கினாலும், நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ற அளவு தரமானதாக உள்ளதா  என்பதை அறிய வேண்டியதும் அவசியமாகிறது. . தங்கநகைகள் விற்பனையை பொறுத்தவரை இந்தியாவில் பல இடங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனை தடுக்கும் வகையில் தங்க நகைகளில் ஹால்மார்க் இருக்க வேண்டும் எனக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தங்கம்
ஏற்கனவே பலமுறை அறிவிப்புகள் வந்தும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அமலுக்கு கொண்டுவரப்படவில்லை. தற்போது தங்கத்தின் தேவையானது மீண்டு வர தொடங்கியுள்ளது. இதனால்  மத்திய அரசு இந்த முடிவினை எடுத்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து நுகர்வோர் விவகார செயலர் லீனா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் , தங்க ஆபரணங்களுக்கான ஹால்மார்க் திட்டத்திற்கு ஏற்கனவே பல முறை அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்போது முழு உத்வேகத்துடன் இத்திட்டத்தினை செயல்படுத்துவதில்  பிஐஎஸ் ஹால்மார்க்  உறுதி கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் நாளை ஜூன் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். 

பிஐஎஸ்
இந்த நடைமுறையின் படி நகை விற்பனையாளர்கள் 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் என 3 கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய வேண்டும். இத்துடன்  இந்திய தர நிர்ணய அமைப்பு பிஐஎஸ் சான்றான ஹால்மார்க் முத்திரையும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.தற்போது இந்தியா  முழுவதும் 234 மாவட்டங்களில் 892 ஹால்மார்க் மதிப்பீடு மற்றும் முத்திரை வழங்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. உள்ளன. சுமார் 34,647 நகைக்கடைகள் மட்டுமே இதில் பதிவு செய்துள்ளன. மற்ற மாவட்டங்களிலும்  அரசு ஹால்மார்க் முத்திரை மற்றும் மதிப்பீடு மையங்களை அமைக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நாளை ஜூன் 1 முதல் நகை வாங்குபவர்கள் பிஐஎஸ் ஹால்மார்க் தர முத்திரை, கேரட் அளவு, மதிப்பீடு மையத்தின் பெயர் மற்றும் ஜூவல்லரி முத்திரை இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதாவது இனி நகைக்கடைகள் 22, 18, 14 காரட் ஆகிய மூன்று கிரெடுகளில் மட்டுமே தங்க நகை விற்க வேண்டும். முன்னர் 10 கிரேடுகளில் விற்பனை செய்தது போல் தங்கத்தை  இனி விற்க முடியாது. மேலும் இனி BIS ஹால்மார்க் முத்திரையுடன் மட்டுமே தங்கநகை விற்பனை நடைபெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தங்க நகைகளை வாங்கும் போது நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web