நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம்! ரெடியாகுது ஜெய்ப்பூர் அரண்மனை!

 
ஹன்சிகா

சிம்பு காதலித்த பெண்கள் எல்லாம், ஒவ்வொருத்தராக கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாகி கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிம்புவுக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை என்கிற மன வருத்தம் தான் டி.ராஜேந்தருக்கு பெரிய கவலையாக இருக்கிறது. சிம்புவின் எக்ஸ் லவ்வர்ஸ் லிஸ்ட்டில் இருந்த நடிகை ஹன்சிகாவுக்கு இப்போது திருமணம் கைகூடி இருக்கிறது. ஜெய்ப்பூர் அரண்மனை ரெடியாகிக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் காலையில் இருந்தே கோலிவுட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறது. ‘ஷக்கலக்கா பூம் பூம்’ என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கியவர் ஹன்சிகா மோட்வானி. அதே நேரத்தில் ‘தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத்’ என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார்.

இதையடுத்து, 2007-ம் ஆண்டு பூரி ஜெகனாத் இயக்கத்தில் வெளியான ‘தேசமுதுரு’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘ஆப் கா சரூர்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் 2008-ல் வெளியான ‘பிந்தாஸ்’ என்ற கன்னடப் படத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்தார்.

நடிகை ஹன்சிகா

பின்னர், 2011-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வேலாயுதம்’ படத்தில் அறிமுகமான இவர், ‘மாப்பிள்ளை’, ‘எங்கேயும் காதல்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் ஹன்சிகா நடித்த ஐம்பதாவது திரைப்படமாக ‘மஹா’ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நான்கு தமிழ் திரைப்படங்களிலும் 2 தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் இது அவரது குடும்பத்தினர் பார்த்து ஏற்பாடு செய்து திருமணம் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில் ஹன்சிகாவுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹன்சிகா

இந்த திருமணம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. இதையொட்டி 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தயாராகி வருகிறது. ஆடம்பர முறையில் அதிக பொருட்செலவில் இந்த திருமணம் நடைபெறவிருக்கிறது.

டிசம்பர் மாதம் திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டாலும், எந்த நாளில் நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஹன்சிகா மோத்வானி திருமணம் முடிக்கப் போகும் மாப்பிள்ளை.. யெஸ்...வழக்கம் போல பெரிய்ய்ய தொழிலதிபர் தானாம். இந்த ஜோடி கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லாயிருக்கட்டும்னு வாழ்த்துவோம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web