ஜூலை 21 முதல் வாராந்திர சிறப்பு ரயில்!! பயணிகள் உற்சாகம்!!!

 
ரயில்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறும்போது, ‘‘தற்போது இயக்கப்பட உள்ள வாராந்திர சிறப்பு ரெயில்களில் ஒரு இரண்டடுக்கு குளிர்சாதன படுக்கைப் பெட்டி, 2 மூன்றடுக்கு குளிர்சாதனப் படுக்கைப் பெட்டி, 7 இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்புப் பொதுப்பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி பெட்டி இணைக்கப்பட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

ரயில்

இந்த வாராந்திர ரெயில்கள் திருநெல்வேலி- &மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் (எண் 06030) வருகிற 21 முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

அதேபோன்று மறுமார்க்கத்தில் புறப்படும் ரெயில் (எண் 06029) மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி வரை வருகிற 22 முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை வெள்ளிக் கிழமைகளில் இயக்கப்படும். மேலும் இது மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
ரெயிலின் வழித்தடம் குறித்த விவரங்கள்: இந்த ரெயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழ்க்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும். மறுமார்க்கத்திலும் இதே வழித்தடம் பயன்பாட்டில் இருக்கும் ’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்


புதிதாக இயக்கப்பட உள்ள வாராந்திர ரெயிலால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வரப்போகும் பண்டிகை காலங்களில் இதன் பயன்பாடு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எனவே பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web