கணவர் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி!

 
மாணிக்கம் கோமதி மாணிக்கம் கோமதி

இறப்பிலும் இணை பிரியாத தம்பதியரைப் பற்றி அந்த சோகத்திலும் பேசி பேசி நெகிழ்கிறார்கள் ஓசூர் மக்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கணவர் நெஞ்சுவலியால் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (70). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவருக்கு கோமதி (63) என்கிற மனைவி உள்ளார். இந்த நிலையில், நேற்று அதிகாலை மாணிக்கத்துக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். 

கிருஷ்ணகிரி

இதையடுத்து அவரது குடும்பத்தினர், மாணிக்கத்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்து வந்தனர். இதனிடையே, கணவர் மாணிக்கம் மீது அதிக அன்பு வைத்திருந்த கோமதி, அவரது பிரிவால் மனமுடைந்து காணப்படார். அப்போது, காலை 8 மணியளவில் கோமதி திடீரென மயங்கி உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரிடம் சென்று பார்த்தபோது அவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

மாணிக்கம் கோமதி

கணவர் இறந்த சில மணி நேரங்களில் அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, இருவரது உடலுக்கும் ஒன்றாக இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. தம்பதியினர் இறப்பிலும் இணைபிரியாமல் ஒன்றிணைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை