இன்றாவது வெற்றிக் கணக்கை தொடங்குமா இந்தியா?! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

 
இந்தியா தென் ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில்  5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கட்டாக்கில் நடந்த 2வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இன்று இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற உள்ளது. 

இந்தியா தென் ஆப்பிரிக்கா
இந்த போட்டியில் தோற்றால்  இந்திய அணி தொடரை இழந்து விடும். இதில்  லோகேஷ் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால்  கேப்டன் பொறுப்பை ஏற்ற விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஏற்றுள்ளார். இந்திய அணி இந்த தொடரில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். 


தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருக்கிறது. பேட்டிங்கில் வான்டெர் டஸன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், பவுமாவும், பந்து வீச்சில் ரபடா, நோர்டியா, வெய்ன் பார்னெலும் நல்ல நிலையில் உள்ளனர். அத்துடன் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத குயின்டான் டி காக் இன்றைய ஆட்டத்தில் கலந்து கொள்கிறார். ஏற்கனவே முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றதால்  தென்ஆப்பிரிக்க அணி உற்சாகத்துடன் களம் இறங்க உள்ளது. தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் போராடியாவது  வெற்றி பெற வேண்டியது அவசியம். இதனால் இன்றைய  ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. 

இந்தியா தென் ஆப்பிரிக்கா

இன்றைய போட்டியில் இந்திய அணி வீரர்களின் உத்தேச பட்டியல் : ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், அவேஷ்கான், யுஸ்வேந்திர சாஹல். 
தென்ஆப்பிரிக்கா: பவுமா (கேப்டன்), குயின்டான் டி காக் அல்லது ரீஜா ஹென்ரிக்ஸ், பிரிட்டோரியஸ், வான்டெர் டஸன், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், ரபடா, கேஷவ் மகராஜ், நோர்டியா, தப்ரைஸ் ஷம்சி. 
விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ள  இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு மூலம் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web