நயன்தாரா கைது செய்யப்படுவாரா? வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றெடுத்த பிரபலங்கள் லிஸ்ட்!

 
நயன்

வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்றுக் கொள்வது இந்தியாவில் தடைச் செய்யப்பட்டுள்ளது. அது தவிர, கணவன், மனைவி என இருவரில் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் குறை இருந்தால் மட்டுமே திருமணமான 5 வருடங்களுக்குப் பிறகு வாடகைத் தாய் மூலமாக பெற்றுக் கொள்ளும் உரிமை உள்ளது. இந்நிலையில், திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மாவானார் நயன்தாரா. இது குறித்து நயனும், விக்னேஷ் சிவனும் குழந்தைகளை முத்தமிடும் புகைப்படத்தை ட்விட்டரில் ஷேர் செய்து, விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.  நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.

இந்நிலையில் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இதை விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பகுதிகளில் அறிவித்துள்ளார். நயன்தாரா நடிப்பில், தெலுங்கில் வெளிவந்த காட்பாதர் திரைப்படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நயன்

இதேபோன்று அட்லி இயக்கும், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும், ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் பின்னர் புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை.

இந்நிலையில், இரட்டைக் குழந்தைகளுக்கு வாடகைத் தாய் மூலமாக அம்மாவான நயன், நிறைய சட்டப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என்கிறார்கள். பொதுவாக, கணவனோ, மனைவியோ குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் குறை இருக்கும் பட்சத்தில், திருமணமான 5 வருடங்களுக்குப் பிறகே வாடகைத் தாயை வைத்துக் கொள்ள அனுமதி உண்டு. அதுவும், கடந்த ஜனவரி மாதமே வாடகை தாய் மூலமாக குழந்தையைப் பெற்றெடுக்க இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்துள்ளது.  கைது செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது என்கிறார்கள். ஜனவரிக்கு பின்னரே நயன் - விக்கி ஜோடி திருமணம் நடந்தேறியது.

நயன்தாரா

வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோரான நயன்தாரா - விக்னேஷ்சிவன் ஜோடியைப் போலவே, வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்ட சினிமா நட்சத்திரங்களின் பட்டியல் நீள்கிறது. 

  • பாலிவுட் நட்சத்திர ஜோடியான அமீர்கான் - கிரண் ராவ் தம்பதியர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்து, திரையுலகில் வாடகைத் தாய் முறையை அறிமுகம் செய்தார்கள். இவர்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு ஆசாத் ராவ் கான் என்கிற மகன் வாடகைத் தாய் மூலமாக பிறந்தார்.
  • அதன் பிறகு, இந்தியில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான், கடந்த 2013ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர். அவர் தான் ஷாருக்கானின் இளைய மகன் அப்ராம் கான்.
  • பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோனும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தார். சன்னி லியோன் - டேனியல் வைபர் தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் ஆஷர், நோவா என்கிற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
  • பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி - தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் குழந்தையை தானே பெற்றுக்கொண்ட ஷில்பா ஷெட்டி, இரண்டாவது குழந்தையை வாடகைத் தாய் முறையில் பெற்றுக்கொண்டார். கடந்த 2020-ம் ஆண்டு ஷில்பா ஷெட்டிக்கு சமிஷா என்கிற மகள் இந்த முறையில் பிறந்தார்.
  • பிரபல நடிகையும், பஞ்சாப் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தாவும் கடந்த 2021-ம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டார்.
  • பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா - பாப் பாடகர் நிக் ஜோனாஸ் தம்பதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மல்டி மேரி என்கிற பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை அவர்கள் வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொண்டாய்ங்க.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web