இந்தியாவில் 4 வது அலை தொடக்கமா?!! ஐசிஎம்ஆர் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

 
ஐசிஎம்ஆர்


இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஜூனில் கொரோனா  4 வது அலை உருவாகலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதற்கேற்றபடி தினசரி கொரோனா தொற்று உச்சத்தை தொட்டு வருகிறது. இது குறித்து ஐசிஎம்ஆர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாககொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்தது.

கொரோனா

இருப்பினும் சில தினங்களாக தினசரி தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே இது குறித்து மத்திய சுகாதாரத்துறை கூறும்போது, ‘‘கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாநிலங்கள் தங்கள் கண்காணிப்பு பணிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா
இதை சாதகமாக  ஆக்கி கொண்டு சிலர் இணையதளத்தில் இந்தியாவில் கொரோனா 4வது அலை உருவாகிவிட்டது என்று வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது போல் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல் இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web