சாப்பாடு தருவீங்களா?! உணவுக்காக ஹோட்டலில் காத்திருக்கும் கடமான்!!

 
கடமான்

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஒரு பகுதி வனப்பகுதியாக  கேரள எல்லையில் அமைந்துள்ளது.இங்கு உணவுக்காகவும், சில நேரங்களில் வழிதவறியும் காட்டு விலங்குகள் வசிப்பிடங்களுக்குள் நுழைந்துவிடுவதுண்டு. வனத்துறையினருக்கு தகவல் அளித்தால் அவர்கள் மீண்டும் அவைகளை பிடித்து பாதுகாப்பான வனப்பகுதிகளில் விட்டுவிடுவதும் வாடிக்கையே. அந்த வகையில் ஒற்றை கடமான் ஒன்று காட்டைவிட்டு வெளியேறி உணவுக்கான ஓட்டல் வாசலில் நின்று கொண்டிருந்தது. இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடமான்

யானை, மான் உட்பட  வனவிலங்குகள் உணவு மற்றும் நீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது உண்டு. அப்படி நுழையும் போது இரு தரப்பிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுவிடுவது தடுக்க முடியாதது.கேரள மாநிலம் திருச்சூர் அருகே சாலக்குடி அதிரப்பள்ளி என்ற நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதுண்டு. இது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதாலும், பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதாலும் கேரள வனத்துறையினர் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வந்து உணவு உண்ணும் ஓட்டல் வாசலில் இன்று அரிய காட்சி ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஓட்டல் வாசலில் ஒற்றை கடமான் உணவுக்காக காத்திருந்த காட்சி சுற்றுலா பயணிகளை அதிர செய்துள்ளது. காட்டுக்குள் இருந்து வெளியேறிய கடமான் உணவு தேடி மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்தது பெரிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web