மோடியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண்மணி திடீர் கைது! பரபரக்கும் அரசியல்!

 
மோடி கோத்ரா வழக்கு

பிரதமர் மோடியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண்மணி திடீரென கைது செய்யப்பட்டிருப்பது தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து பிரதமர் மோடி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தற்போது பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்தவரை அகமதாபாத் காவல்துறையின் கைது செய்துள்ள சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ரா என்ற இடத்தில் நடைபெற்ற ரெயில் எரிப்பு சம்பவம் மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரம் காரணமாக 69 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான மோடி உள்ளிட்ட 60 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் பிரதமர் உள்ளிட்ட 60 பேர் மீது அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று சிறப்பு விசாரணைக்குழு கூறியது. இதனை குஜராத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. எனவே இது குறித்து போடப்பட்ட மேல் முறையீட்டு வழக்கும் குஜராத் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

கோத்ரா ரயில் எரிப்பு

கடந்த 2018ம் ஆண்டு ஸகியா ஜாப்ரி என்ற பெண்மணி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இவர் கலவரத்தில் உயிரிழந்த எக்சான் ஜாப்ரி என்பவரின் மனைவி ஆவார். உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த 24ம் தேதி தனது தீர்ப்பை அறிவித்தது. அதில், பிரதமர் மோடிக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கோத்ரா ரயில் எரிப்பு

இந்நிலையில், போலி ஆவணம் தயார் செய்து அதனை வைத்து பிரதமர் மோடி மீது பொய் குற்றம் சாட்டினார் என்று சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை அகமதாபாத் குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர். டீஸ்டா அதிரடியாக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web