சம்பள பாக்கி தராததால் பெண்ணை அடித்தே கொலை!! ஊழியர் பரபரப்பு வாக்குமூலம்!!

 
கொலை

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த கருந்தேவன்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (30). இவர் கோவையில் கிரில் கேட் அமைக்கும் தொழிலை நடத்தி வருகிறார். இவரது தந்தை மாதேஸ்வரன் (60), தாய் மல்லிகா (55) அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.சண்முகத்தின் எதிர் வீட்டில் சின்ராசு (28) என்பவர் குடியிருந்தார். எனவே சின்ராசை கோவையில் தான் நடத்தி வரும் கிரில் கேட் தொழிற்சாலையில் சண்முகம் பணியமர்த்தினார்.

நீட் தேர்வில் முதலிடம்! நாமக்கல் மாவட்டம் அசத்தல்!

ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் சின்ராசு அந்த வேலையில் நீடிக்கவில்லை. எனவே சண்முகம், சின்ராசுவுக்கு ஒரு மாத சம்பளம் தர வேண்டி இருந்தது. எனவே தனது சம்பளத்தை தரும்படி சண்முகத்திடம் பல முறை சின்ராசு கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சண்முகம் அதனை தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்ராசு, சண்முகத்தின் வீட்டிற்கு சென்று சம்பள பாக்கியை வாங்கியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த சண்முகத்தின் தாய் மல்லிகாவிடம், சின்ராசு சம்பள பாக்கி குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மல்லிகாவுக்கும், சின்ராசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த சின்ராசு, அங்கு கிடந்த கட்டையை எடுத்து மல்லிகாவை ஓங்கி அடித்தார். இதில், மல்லிகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மல்லிகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக மல்லிகா சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் செல்லும் வழியில் மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மல்லிகாவை கட்டையால் தாக்கி கொலை செய்த சின்ராசை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘‘சம்பள பாக்கியை பலமுறை கேட்டும் சண்முகம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த நான், அவரது வீட்டிற்கு சென்று அவரது தாய் மல்லிகாவிடம் பணத்தை வாங்கித்தருமாறு கேட்டேன். அப்போது மல்லிகா பணம் கேட்டு வீட்டு பக்கம் வராதே சத்தம் போட்டதுடன் என்னை தரக்குறைவாக பேசினார்.

கைது

இதனால் எனக்கு ஆத்திரம் உச்சிக்கு ஏறியது. இதனால் அங்கிருந்த கட்டையால் மல்லிகாவை அடித்தேன்’’ என்று சின்ராசு தனது வாக்குமூலத்தில் கூறினார். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட சின்ராசு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.வயதான பெண் என்றும் பார்க்காமல், சம்பள பாக்கி தகராறில் வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web